மெரீனாவுக்கு செல்ல தடை...!

மெரீனாவுக்கு செல்ல தடை...!
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கும்  நிலையில், மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை  கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். மேலும் இன்று மாலை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதனால் பிரதமரின் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் அங்கிருந்து நடேசன் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக வாலாஜா சாலையை அடையலாம் என கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com