சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிய பாகுபாடு இல்லை...  தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் பேட்டி...

சென்னை ஐ.ஐ.டி.யில் எந்தவித சாதிய பாகுபாடும் இல்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிய பாகுபாடு இல்லை...  தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் பேட்டி...
Published on
Updated on
1 min read

உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிய பாகுபாடுகள் நிகழ்வதாக, அவ்வப்போது சர்ச்சைக்குரிய புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வந்த விபின் புதியத் என்ற ஆசிரியர், சாதிய பாகுபாடு காரணமாக, தாம் பணியில் இருந்து விலகுவதாக ஐ.ஐ.டி-க்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஐ.ஐ.டி-யில் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், பட்டியல் சாதி மற்றும் பிற பின்தங்கிய வகுப்பு ஆசிரிய உறுப்பினர்களின் அனுபவத்தை ஆய்வு செய்ய இந்த நிறுவனம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.

இதுகுறித்து சென்னை எம்.ஆர்.சி.நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர், ஐ.ஐ.டி-யில் பாகுபாடுகள் நிலவுவதாக தெரிந்தால் நேரடியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், ஐ.ஐ.டி.யில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், ஐ.ஐ.டி நிர்வாகம் அளித்த விளக்கம் திருப்திகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com