"இனி அரசு வேலை என்பதே கிடையாதா? இளைஞர்களின் கனவை சிதைக்கும்.." கனிமொழி எழுப்பிய கேள்வியின் பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதர அமைப்புகளுக்கும் OMCL பணியாளர்களை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
"No More Permanent Government Jobs?" — The Background Behind Kanimozhi's Question Shaking Youth Dreams
"இனி அரசு வேலை என்பதே கிடையாதா? இளைஞர்களின் கனவை சிதைக்கும்.." கனிமொழி எழுப்பிய கேள்வியின் பின்னணி என்ன?
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வழங்க OMCL நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதர அமைப்புகளுக்கும் OMCL பணியாளர்களை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது சமூக வலைத்தள பதிவில், "தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாகத் தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா தவெக அரசு?

இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்." எனக் கூறியுள்ளார் அவர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com