புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி, அன்னவாசல் ஒன்றியம், அன்னவாசல் பேரூராட்சி மற்றும் விளத்துப்பட்டி ஊராட்சி சித்துபட்டி கிராமத்தில், அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று காலை பார்வையிட்டு, பின்னர் நெல் மற்றும் பதர் இரண்டையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, விவசாயம் தொடர்ந்து செழிக்க வேண்டும், நாடெங்கும் மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கடவுளை வணங்கி இயந்திரத்தில் நெல்லை கொட்டினார்.