துவங்குகிறது வடகிழக்கு பருவமழை..! தமிழகத்தில் இயல்பை விட அதிகனமழைக்கு வாய்ப்பு!?

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகுவது மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்குவது ....
Northeast monsoon begins
Northeast monsoon begins
Published on
Updated on
1 min read

இவ்வாண்டு தமிழகத்தின் வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கும்

திருவண்ணாமலை திருப்பத்தூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகுவது மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்குவது குறித்து  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அலுவலகத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

இந்திய வானிலை ஆய்வு மையம் இரண்டு வாரகாலத்திற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது அதன்படி தென்மேற்கு பருவமழை 16-17 ஆம் தேதி விலகுகிறது..

அதே போல் தமிழகம் புதுவை காரைக்காலில் 16லிருந்து 18ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில்  வடகிழக்கு பருவமழை துவங்கும்.இரண்டு வருடங்களில் மட்டும் தான் வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது ..

வட மாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பை விட அதிகமாகவும்

தென் மாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்பு

92 நாட்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் அதாவது அக்டோபர் நவம்பர் டிசம்பர் வரை.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை 5செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இயல்பாக 17செ.மீ பெய்யும்.

அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரியில் மிகக்கனமழை பெய்யும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு

திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,மாலை ,அல்லது இரவில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நிறைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் உருவாக வாய்ப்பு கடந்த கால நிகழ்வுகளை வைத்து குறிப்பிடலாம் ஆகையால் எத்தனை புயல் அல்லது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று தற்பொழுது கணிக்க இயலாது..சென்னையை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை 29% கூடுதலாக பதிவாகியுள்ளது.

மிகத்துல்லியமாக கணிப்பது கடினம் இயற்கையை ஆகையால் குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிவினை கணிப்பது கடினம் தான்.

புயல் சின்னம் உருவாகும் போது 20செ.மீ அளவிற்கு அதிக வாய்ப்புள்ளது.மழை பொழிவினை பொறுத்து தான்  பருவமழை தீவிரம் குறித்து தெரிய வரும்.அரசுக்கு மழை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளித்து வருகிறோம்.தென் மேற்கு பருவமழை மிகக்குறைவாக பதிவான மாவட்டங்கள் திருச்சி, தூத்துக்குடி, கரூர், தருமபுரி ஆகியவை ஆகும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com