"துணிகளை உலர்த்த கடைசி நாள்" இனி 'விடாது மழை'.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

மேலும் நாளை முதல் மழை பொழியத் தொடங்கிவிடும் என்றும், அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
"துணிகளை துவைத்து விடுங்கள்" இனி மழை வெளுத்துவாங்கும்.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
"துணிகளை துவைத்து விடுங்கள்" இனி மழை வெளுத்துவாங்கும்.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!AI Generated
Published on: 
Updated on: 
1 min read

மிக நீண்ட கோடை காலத்தை கடந்து வந்துள்ள சென்னை மக்கள் மழையை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அவரது தமிழ்நாடு வெதர்மேன் சமூக வலைத்தள பக்கத்தில், "வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, வெயிலில் துணிகளை உலர்த்துவதற்கான கடைசி சரியான நாள் இன்றுதான்." எனக் கூறியுள்ளார்.

மேலும் நாளை முதல் மழை பொழியத் தொடங்கிவிடும் என்றும், அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

"சென்னை மற்றும் தமிழக மக்களே, இன்றைய சூரிய ஒளியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மழை பெய்யும் முன் உங்கள் துணிகளை உலர்த்தி விடுங்கள்." எனக் கூறியுள்ளார் பிரதீப் ஜான்.

இந்த ஆண்டு சென்னை இதுவரையில் வழக்கத்துக்கு அதிகமாக வறண்டு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) பகுதியில் மழை பொழிவு பற்றிய பதிவில், "கே.டி.சி.சி-யின் (சென்னை) நேரம் வரும், அது வரும்போது, ​​மிகவும் வலுவாக வரும்!!!" எனக் கூறியிருந்தார் பிரதீப் ஜான். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 தென்கிழக்கு வழங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவதன்படி, அக்.14-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

"துணிகளை துவைத்து விடுங்கள்" இனி மழை வெளுத்துவாங்கும்.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
விஜய், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை.. துபாயில் கைமாறிய ரூ.1000 கோடி! 'Hatsun சேர்மன்' சந்திப்பில் மர்மம்.. அப்பாவு வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com