44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிரடி காட்டும் ஓபிஎஸ்!!

அதிமுகவில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், காமராஜ் உள்ளிட்ட 44 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிரடி காட்டும் ஓபிஎஸ்!!
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-ம் பரபரப்பாக பேட்டியளித்தார்.

இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட 44 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின், கே.சி.கருப்பணன், கேசி வீரமணி, ரா.குமரகுரு, எம்.பரஞ்சோதி ஆகியோரும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 44 பேரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொருப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com