
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் :
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இனிப்புகள் வழங்கிய ஓபிஎஸ் :
அதனைத்தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.