16 வயது சிறுவனின் வயிற்றில் இத்தனை பொருட்களா? - நகவெட்டி முதல் நாணயங்கள் வரை.. சிகிச்சையில் வெளிவந்த அதிர்ச்சி!

23 நாணயங்கள், உலோக தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், செயின், ஆணி போன்ற பொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்
objects in a 16-year-old boy's stomach
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் வனிதா தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 16 வயதில் பிரித்திக் ரோஷன் என்ற ஒரு மகனுக்கும் 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பிரித்திக் ரோஷன் -க்கு தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவனின் வயிற்றில் பல்வேறு பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். அதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக நீடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிகிச்சைக்கு பணம் வாங்காமல் மகனை காப்பாற்றிய மருத்துவர் சுந்தர பாண்டியனுக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம்" என்று தாய் வனிதா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மகன் பிரித்திக் ரோஷன் வயிற்று வலியால் துடித்ததுடன் வாந்தியும் எடுத்துள்ளார். சில நாட்களாகவே தாய் வனிதாவிடம் காசு கேட்கும் பழக்கத்தை வைத்துள்ளார் சிறுவன் பிரித்திக் ரோஷன். தொடர்ந்து கேட்பதால் வனிதாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அன்றும் வனிதாவிடம் காசு வாங்கி சில நொடிகளில் வாயில் போட்டு விழுங்கி உள்ளார். அப்பொழுது தான் தெரியவந்துள்ளது இவன் தினமும் காசை விழுங்குகிறான் என்று. இப்படி செய்ய கூடாது என்று வனிதா கண்டித்துள்ளார். சரி என்ற பிரித்திக் ரோஷன் சில நொடிகளையே வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்துள்ளான்.

என்ன செய்வதென்று புரியாத தாய் வனிதா உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு திருவண்ணாமலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் சுந்தரபாண்டியன், உடனடியாக பிரித்திக் ரோஷன் வயிற்றுப் பகுதியில் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். மேலும் தாய் வீட்டில் நடந்தவற்றை மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் சிறுவனின் வயிற்றில் கூர்மையான உலோக பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வனிதா வீட்டில் அடிக்கடி நகவெட்டி, செயின், பின் உள்ளிட்ட பல்வேறு உலோக பொருட்கள் காணாமல் போனதாகவும், சில நாட்களாக என்னிடம் தினமும் காசு வாங்கினான் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சுந்தரபாண்டியன் இது குறித்து பேசியதாவது, 16 வயது சிறுவன் பிரித்திக் ரோஷனை அவனது தாயார் வயிற்று வலியால் அழைத்து வந்தபோது, உடனடியாக எக்ஸ்-ரே எடுத்து பார்த்தோம். அவன் வயிற்றில் சில கூர்மையான பொருட்கள் இவ்பாத்து தெரிய வந்தது. ஆகஸ்ட் 22 அன்று தாயின் கண் முன்னால் ஒரு காசை விழுங்கி விட்டான் என்றும் உடனடியாக நள்ளிரவில் மயக்க மருந்து நிபுணரை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். அதில் சிறுவனின் இரைப்பையில் இருந்து 23 நாணயங்கள், உலோக தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், செயின், ஆணி போன்ற பொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அச்சிறுவன் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தற்போது அவன் உடல்நிலை சீராக இருப்பதோடு, நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் சிகிக்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும் "மனநலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகள், பாதுகாப்பு விஷயங்களில், பெற்றோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனநலப் பிரச்னை உள்ளவர்களை பார்த்துக் கொள்வதும், அவர்கள் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிப்பதும் பெற்றோரின் பொறுப்பு" என்றும் மருத்துவர் சுந்தரபாண்டியன் அறிவுறுத்துகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com