நரிக்குறவர்களுக்கு ஒதுக்கபட்ட இடுகாடு ஆக்கிரமிப்பு - உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத அவல நிலை!

நரிக்குறவர்களுக்கு ஒதுக்கபட்ட இடுகாடு ஆக்கிரமிப்பு - உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத அவல நிலை!
Published on
Updated on
1 min read

சிதம்பரம் அருகே நரிக்குறவர் இனத்தவருக்கு ஒதுக்கபட்ட இடுகாட்டை ஒரு சிலர் ஆக்கிரமித்து கொண்டதால், உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள லால்புரத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கையான விஜய் மற்றும் வெண்ணிலா ஆகியோர், உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இடுகாட்டிற்கு உடல்களை எடுத்துச் சென்றபோது, நடராஜன் என்பவர் அங்கு வேலி அமைத்து, உடல்களை புதைக்க கூடாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரின் உடலையும் பொது இடுகாட்டில் அடக்கம் செய்ய சென்றபோது, அப்பகுதி மக்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் போலீசார், நடராஜனை எச்சரித்து, வேலிகளை அகற்றினர். அதன் பிறகு இருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com