நிச்சயம் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். ... பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி...!!

நிச்சயம் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும், அவ்வாறு கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது, எல்லோருக்கும் தெரியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். ... பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி...!!
Published on
Updated on
1 min read

தருமபுரியில் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் உரையாற்றினார்.

அதில், கொரானா தொற்று பரவல் இருந்த காலத்திலும் கட்சியினரையும் தொண்டர்களையும் பார்க்க வந்துள்ளேன். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  ஆனால் இந்த திமுக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை மேல் முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிச்சயம் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். அவ்வாறு கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது, எல்லோருக்கும் தெரியும் என்றார்.


இனி நாம் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் இந்த மாவட்டத்தில் தான் ஒரு அதிசயமான நிகழ்வு நடந்தது. ஆனால் இதே மாவட்டத்தில் தான் ஒரு கேவலமான நிகழ்வும் நடந்தது என கூறிய அவர், கடந்த தேர்தலில் கூட்டணி தர்மமே இல்லாமல் போனது. இந்த கட்சியின் தலைவர் ஜிகே மணி, மூன்று நாட்கள் தொகுதிக்குள்ளே போக முடியவில்லை. பாமகவை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கைககோர்த்துக் கொண்டு தோற்கடிககும் வேலைகளை செய்து வந்தனர் என கூறினார்.

இனி வரும் தேர்தலில் வெற்றி பெற திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் மற்ற சமுதாயங்களை ஒன்றிணைத்து திண்ணை பிரச்சாரம் செய்து கட்டாயம் வெற்றி பெற செய்ய வேண்டும். என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று பாரதியின் பிறந்தநாள். இனியொரு விதி செய்வோம் என்று பாரதியார் சொன்னார். இன்று நானும் சொல்கிறேன், நாம் இனியோரு விதி செய்வோம்,  அதை எந்நாளும் காப்போம் என்று ராமதாஸ் தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com