அரசு மருத்துவமனையில்  அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள்:  வெளுத்து விலாசிய ககன் தீப் சிங் பேடி..!

அரசு மருத்துவமனையில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள்: வெளுத்து விலாசிய ககன் தீப் சிங் பேடி..!

Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சைகள்  குறித்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் கேட்டறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று  ஆய்வு செய்தார். 

இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த பொதுக்கழிவறையை  ஆய்வு செய்த போது கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாமலும், ஒரு சில கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

 மேலும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்களின் மேலாளர் சிலம்பரசனை அழைத்து இந்த வேலைக்கு நீங்கள் தகுதியில்லை எனவும், பணியில் இருந்து உடனே வெளியேறுங்கள் எனவும், நீங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என கடுமையாக சாடினார்.

இதன் தொடர்ச்சியாக தாய் சேய் நல பிரிவில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com