" வரும் 14-ல் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்..! " - கி.வீரமணி அறிவிப்பு.

" வரும் 14-ல் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்..!   "   - கி.வீரமணி  அறிவிப்பு.
Published on
Updated on
1 min read

ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது கடமையை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை சொன்னது ஆளுநரை இடித்துரைக்க கூடியதாக உள்ளது. பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி கூறுகையில்:- 

ஆளுநர் பதவி விலக வேண்டும் நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் இல்லையென்றால் மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.

இதுவரை ஆளுநரை ஆதரித்து வந்த அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது கடமையை செய்ய வேண்டும் என்பது ஆளுநரை இடித்துரைக்க கூடியதாக உள்ளது.

வங்கிகளில் கிளார்க் பணிகளில் வேண்டுமென்றே வட மாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தம் செய்கிறார்கள். எனவே அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளார்க் பணிகளில் தகுதி படைத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதை கண்டித்து ஜூலை 14 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம்,மணிப்போர் கலவரம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பிரதமர் வெளிநாடு செல்கிறார்.பாஜக அரசின் பலவீனம் நாளுக்கு நாள் வெளி வருகிறது. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம். பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள் ",  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com