தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி ரமலான் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சிதலைவர்கள் பலர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி ரமலான் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் இது எனக் கூறி இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்  ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக தலைவர் ராமதாஸ்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com