
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டம் நடைபெறும் ஸ்ரீ வாரு மண்டபம் சென்றடைந்தார்.
வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு சென்ற ஓ.பி.எஸ்சுக்கு, அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, அங்கு பெருமளவில் குழுமியிருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ஈ.பி.எஸ் வாழ்க என கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.