முக்கொம்பு மேலணையில் இருந்து 36 ஆயிரத்து, 354 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு...

முக்கொம்பு மேலணையில் இருந்து 36 ஆயிரத்து, 354 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு...

தொடரும் கனமழையால், முக்கொம்பு மேலணையில் இருந்து, 36 ஆயிரத்து, 354 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில்  திறக்கப்பட்டு வருகிறது. 
Published on

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள முக்கொம்பு அணைக்கு மாயனூர் அணையில் இருந்து, திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் 36 ஆயிரத்து, 244 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது, 36 ஆயிரத்து, 354 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைக்கு வரும் மொத்த நீரும், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் யாரும் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com