

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனித் தொகுதிகளில் ஒன்றான நிலக்கோட்டை, பாரம்பரியமாகவே அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.
வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:
நிலக்கோட்டை தொகுதியின் வாக்காளர் அமைப்பில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது. 18 முதல் 25 வயதுடைய வாக்காளர்கள் 13.35% ஆக உள்ளனர். சமூக ரீதியாகப் பார்த்தால், இது தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அவர்கள் மட்டும் 25% அளவில் உள்ளனர். இவர்களைத் தவிர முக்குலத்தோர் 15%, நாயுடு சமூகத்தினர் 9%, பிள்ளைமார்கள் 7% மற்றும் வேளாள கவுண்டர்கள் 7% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 37% உள்ளனர். இது ஒரு மிதமான நகர்ப்புறம் மற்றும் அதிகப்படியான கிராமப்புறங்கள் கலந்த தொகுதியாகும்.
முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:
நிலக்கோட்டை என்றாலே மல்லிகைப் பூ சந்தைதான் நினைவுக்கு வரும். ஆனால், இங்குள்ள பூ விவசாயிகளுக்குப் பூக்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த விலை ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலை மற்றும் உட்புற கிராம சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது மக்களின் நீண்ட காலப் புகார். அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் ஏற்படும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு இப்பகுதியின் தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
நிலக்கோட்டை தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் வரலாறு (2021 vs 2024):
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தேன்மொழி அவர்கள் 49.8% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 34.81% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 53.2% ஆகத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுக 33% ஆகச் சரிந்துள்ளது. நாம் தமிழர் கட்சி 5.9%-லிருந்து 11.72% ஆகத் தனது வாக்குகளைப் பிரம்மாண்டமாக உயர்த்தியுள்ளது.
2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:
வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் அதிமுக 124 பூத்களில் வலுவாக இருந்தது. 2024-ல் அது 98 ஆகக் குறைந்துள்ளது. திமுக 91 பூத்களிலிருந்து 131 ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. வரும் 2026 தேர்தலில், 110 பூத்களில் அதிமுக வலுவாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன. திமுக 80 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. சுமார் 40 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, அதிமுக 39% வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 33% வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 24% வாக்குகளைப் பிரிக்கும். வெற்றி வித்தியாசம் சுமார் 6% ஆக இருக்கும். சமூகக் கணக்குகளின்படி அதிமுகவிற்கு இங்கு அட்வான்டேஜ் அதிகமாகவே உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.