அரவக்குறிச்சியில் மல்லுக்கட்டப்போவது யார்? முருங்கை விவசாயிகளின் ஓட்டு யாருக்கு? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் வெளியிட்ட திக் திக் முடிவுகள்!

வறட்சி காலங்களில் ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்குத் தொடர்கதையாக உள்ளது...
aravakurichi
aravakurichi
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பான தொகுதியாகக் கருதப்படும் அரவக்குறிச்சி, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதுமையான தீர்ப்பை வழங்கி வருகிறது.

வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:

அரவக்குறிச்சி தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 12% ஆக உள்ளனர். 52.3% பெண் வாக்காளர்களுடன் பெண்கள் இங்குப் பெரும்பான்மையாக உள்ளனர். சமூக ரீதியாக, வேளாள கவுண்டர்கள் 35% ஆகவும், முஸ்லிம்கள் 12%, சோழிய வேளாளர்கள் 10%, நாயுடு சமூகத்தினர் 8%, மற்றும் ஆதிதிராவிடர்கள் 3% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 32% உள்ளனர். இது முற்றிலும் விவசாயம் சார்ந்த ஒரு கிராமப்புறத் தொகுதியாகும்.

உள்ளூர் பிரச்சனைகள்:

உலக அளவில் முருங்கை ஏற்றுமதிக்கு அரவக்குறிச்சி பெயர் பெற்றது. ஆனால், இங்குப் பல ஆண்டுகளாகக் கோரப்படும் 'அரசு முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை' இன்னும் அமைக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் பெரும் ஆதங்கமாக உள்ளது. மேலும், சாயப்பட்டறை மற்றும் சர்க்கரை ஆலைகளின் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவது, அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிபுணர்கள் பற்றாக்குறை ஆகியவை முக்கியமான பிரச்சனைகளாகப் பட்டியலிடப்படுகின்றன. வறட்சி காலங்களில் ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்குத் தொடர்கதையாக உள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 53.03% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே 53% வாக்குகளைத் திமுக தக்கவைத்துள்ளது. அதிமுக 2021-ல் 38.9% வாக்குகளைப் பெற்றது. 2024-ல் அதிமுகவின் வாக்கு சதவீதம் பெரிய அளவில் மாறாமல் 39% என்ற அளவிலேயே உள்ளது. நாம் தமிழர் கட்சி 4.15%-லிருந்து 5.4% ஆகத் தனது வாக்குகளைச் சற்று உயர்த்தியுள்ளது.

2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2024-ல் திமுக 140 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 98 பூத்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாம் தமிழர் கட்சி 22 பூத்களில் தனது செல்வாக்கை வைத்துள்ளது. வரும் 2026 தேர்தலில், திமுக 100 பூத்களிலும், அதிமுக 95 பூத்களிலும் சம பலத்துடன் மோத வாய்ப்புள்ளது. சுமார் 80 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால், அந்த வாக்குகளைப் பெறுபவர்களே வெற்றியாளராக முடியும்.

கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் திமுக 36% வாக்குகளையும், அதிமுக 35% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 1% முதல் 2% மட்டுமே வித்தியாசம் இருக்கும் என்பதால் இது ஒரு 'நெக்-டு-நெக்' போட்டியாக இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 24% வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். தற்போதைய நிலவரப்படி திமுகவிற்குச் சிறிய 'எட்ஜ்' (Edge) இருந்தாலும், அதிமுக எந்த நேரத்திலும் முந்தக்கூடிய சூழலே நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com