திருப்பூர் தெற்கு தொகுதி யாருக்கு? 'விஜய்' ஃபேக்டர் யாரைப் பாதிக்கும்? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் அதிரடி கணிப்புகள்!

சுமார் 80 பூத்கள் ஸ்விங் பூத்களாக உள்ளதால், இத்தொகுதி ஒரு கடுமையான இழுபறியைச் சந்திக்கும்...
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பின்னலாடை நகரத்தின் இதயப்பகுதியாக விளங்கும் திருப்பூர் தெற்கு தொகுதியில், இந்த முறை அரசியல் களம் அனல் பறக்கிறது.

வாக்காளர் அடையாளங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு:

திருப்பூர் தெற்கு தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.81% ஆக உள்ளனர். 51.14% பெண் வாக்காளர்களுடன் பெண்களின் வாக்கு வங்கி இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. சமூக ரீதியாகப் பார்த்தால், வெள்ளாள கவுண்டர்கள் 36% ஆகவும், ஜவுளித் தொழில் சார்ந்த செங்குந்த முதலியார்கள் 15% ஆகவும் உள்ளனர். இவர்களைத் தவிர அருந்ததியர்கள் 12%, ஆதிதிராவிடர்கள் 8% மற்றும் முஸ்லிம்கள் 21% எனப் பரவலாக உள்ளனர். இது ஒரு முழுமையான நகர்ப்புறத் தொகுதியாகும்.

திருப்பூர் தெற்கு தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சனைகள்:

சாயக்கழிவு மேலாண்மையில் நிலவும் குளறுபடிகள் இத்தொகுதியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தொழில் நிறுவனங்கள் (MSME) மின் கட்டண உயர்வால் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. மழைநீர் வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் லேசான மழைக்கே சாலைகளில் வெள்ளம் தேங்குகிறது. அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை குறித்துப் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தேர்தல் வரலாறு (2021 vs 2024):

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் க.செல்வராஜ் 43.5% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 40.87% வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தனது நிலையை 46.5% ஆக உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுகவும் தனது பலத்தை 42.96% ஆகச் சற்று உயர்த்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி 7.4%-லிருந்து 9.18% ஆகத் தனது வாக்குகளைத் தக்கவைத்துள்ளது.

2026 தேர்தல் கணிப்பு மற்றும் பூத் நிலவரம்:

வாக்குச் சாவடி வாரியாகப் பார்த்தால், 2021-ல் திமுக 120 பூத்களில் வலுவாக இருந்தது, தற்போது அது 122 ஆக உள்ளது. அதிமுக 101 பூத்களில் ஸ்ட்ராங்காக இருந்தது, தற்போது அது 96 ஆகச் சற்று சரிந்துள்ளது. வரும் 2026 தேர்தலில், திமுக 108 பூத்களிலும், அதிமுக 105 பூத்களிலும் சம பலத்துடன் மோத வாய்ப்புள்ளது. சுமார் 80 பூத்கள் ஸ்விங் பூத்களாக உள்ளதால், இத்தொகுதி ஒரு கடுமையான இழுபறியைச் சந்திக்கும்.

கான்சிலிடிக்ஸ் குழுவின் 2026 முன்கூட்டிய கணிப்பின்படி, திமுக 35% வாக்குகளையும், அதிமுக 34% வாக்குகளையும் பெறும் எனத் தெரிகிறது. விஜய் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26% வாக்குகளைப் பிரிக்கும். வெறும் 1% வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் இருப்பதாகக் கணிப்புகள் கூறினாலும், தற்போதைய மேயர் தினேஷ்குமார் வேட்பாளராகக் களம் இறங்குவதால், அவர் மீதான அதிருப்தி அலை அல்லது ஆதரவு அலை வெற்றியைத் தீர்மானிக்கும். விஜய்யின் கட்சிக்கு இத்தொகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com