திண்டுக்கல் மாநகர மக்களின் மனம் யாருக்கு? சிட்டிங் அமைச்சரை வீழ்த்துமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்பு!

இது ஒரு முழுமையான நகர்ப்புறம் மற்றும் மாநகராட்சிப் பகுதியாகும்...
திண்டுக்கல் மாநகர மக்களின் மனம் யாருக்கு? சிட்டிங் அமைச்சரை வீழ்த்துமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்பு!
Published on
Updated on
1 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாளங்கள்:

இங்கு 18-25 வயதுடையவர்கள் 12% ஆக உள்ளனர். சமூகக் கட்டமைப்பில் பிள்ளைமார்கள் 21%, தேவேந்திர குல வேளாளர்கள் 13%, கிறிஸ்தவர்கள் 12%, முஸ்லிம்கள் 12% மற்றும் வன்னியர்கள் 10% எனப் பரவலாக உள்ளனர். இது ஒரு முழுமையான நகர்ப்புறம் மற்றும் மாநகராட்சிப் பகுதியாகும்.

திண்டுக்கல் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூர் பிரச்சனைகள்:

புகழ்பெற்ற பூட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் அரசு உதவிகள் இல்லை என்பது பிரதான குறை. தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிக்கப்படாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்குவது மாநகர மக்களின் பெரும் வேதனையாக உள்ளது.

தேர்தல் வரலாறு:

2021-ல் திமுக 37% வாக்குகளைப் பெற்றது, ஆனால் 2024-ல் அது 58.7% ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 46.9% பெற்றிருந்தது, 2024-ல் 30% ஆகக் குறைந்தது. நாம் தமிழர் 7.7%-லிருந்து 8.9% ஆக உயர்ந்துள்ளது.

2026 கணிப்பு:

2026-ல் அதிமுக 115 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. திமுக 85 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. 40 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, அதிமுக 36% வாக்குகளையும், திமுக 33% வாக்குகளையும் பெறும். விஜய்யின் கட்சி மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26% வாக்குகளைப் பிரிக்கும். சுமார் 3% வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி அதிமுக வசம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கான்சிலிடிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com