எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை - ஜெயகுமார் விமர்சனம்!

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை - ஜெயகுமார் விமர்சனம்!
Published on
Updated on
1 min read

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

சென்னை இராயபுரத்தில் உள்ள தனியார்  மண்டபத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை  விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துவங்கி  வைத்தார்.  இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று விண்ணப்பத்தை பெற்று கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் நலனில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை எனவும், மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும்  குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து சட்டமன்றத்தில் பேச்சுரிமை இல்லை என்று கூறியவர், அதிமுகவின் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்த பிறகும் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருப்பதற்கு ஓபிஎஸ்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com