தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் அனுமதியா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

 தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் அனுமதியா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
Published on
Updated on
1 min read

2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் மற்றும் பருப்பு விநியோகிக்க திமுக அரசு அனுமதி வழங்கியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்ந்து தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்காமல், அதே நிறுவனங்களுக்கு புதிய ஒப்பந்த ஆணைகளை வழங்கியது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளார். அந்நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் ஒப்பந்த ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com