அதிமுக எனும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே,.. ஓ.பி.எஸ்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள பேனர்.!  

அதிமுக எனும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே,.. ஓ.பி.எஸ்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள பேனர்.!  
Published on
Updated on
1 min read

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடக்கும் உள்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் பன்னீர் தோற்றபின் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு முன் கூட நெல்லை பகுதியில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டது.   

இந்நிலையில் அதே போல பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தேனீ மாவட்டத்திலும் பேனர் வைத்துள்ளார். இந்த போஸ்டரை அதிமுகவின் தேனி மாவட்ட மீனவர் அணிச் செயலாளரும் முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான வைகை கருப்பு ஜி என்பவர் தேனியில் உள்ள மதுரை ரோட்டில் மெகா சைஸ் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களுடன் ஓ.பி.எஸ் படமும், அவரது மகன் எம்.பி. ரவிந்திரநாத் குமார் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 
 
அதோடு அந்த பேனரில், ‘அம்மாவின் நல்லாசியுடன்.. அதிமுக என்னும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே.. ஓ.பி.எஸ். அவர்களே. உங்கள் தலைமையில் கழகத்தை வழிநடத்துவோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக எடப்பாடி ஆதரவாளர்களும் ஆங்காங்கு எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். இந்த போஸ்டர் யுத்தம் அதிமுக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com