உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவு... நாசர்!!!

உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவு... நாசர்!!!
Published on: 
Updated on: 
1 min read

அம்பத்தூர் ஆவின் பால்பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு செய்து கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் ஐஸ்க்ரீம் உற்பத்தியை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆவின் சார்பாக  கோடைகாலத்தினை கருத்தில் கொண்டு நடமாடும்  ஐஸ் க்ரீம் விற்பனை வாகனத்தினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டுள்ளது.   இதனையொட்டி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஐஸ்கிரீம் உற்பத்தி அலகினை ஆய்வு மேற்கொண்டார்.  அப்பொழுது ஐஸ்கிரீம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.  

மேலும் லஸ்ஸி, மோர்,தயிர், மில்க் ஷேக் உள்ளிட்ட உப பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து வேகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் நாசர் ஆலோசனை வழங்கினார். தனியாருக்கு நிகராக ஐஸ்கிரீம் லஸ்ஸீ, மில்க் ஷேக் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  மேலும் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், லஸ்ஸீ மோர், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com