சென்னை மெரினாவில் பரபரப்பு! சென்னை மாநகராட்சியின் அதிரடி செயல்...உச்சகட்ட கோபத்தில் மீன் விற்பனையாளர்கள்...!!

சென்னை மெரினாவில் பரபரப்பு! சென்னை மாநகராட்சியின் அதிரடி செயல்...உச்சகட்ட கோபத்தில் மீன் விற்பனையாளர்கள்...!!
Published on
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மீன் கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்றதை எதிர்த்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது.

இதில், ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வது இல்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரைக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மீன் விற்பனையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், சாலையில் அமர்ந்து வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com