ஆன்லைனில் நெல் விற்பனை செய்யலாம்... தமிழக அரசின் அறிவிப்பு...

விவசாயிகள் குறுவை நெல்லைஏற்கெனவே இருந்த நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆன்லைனில் நெல் விற்பனை செய்யலாம்... தமிழக அரசின் அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  மாவட்ட ஆட்சியர்களிடம் உரியஅனுமதி பெற்று, வாணிபக் கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தநிலையில் மத்திய அரசின் உணவுத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இணையவழி பதிவு முறையை அக்.1-ம் தேதி முதல் செயல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி, விவசாயிகள் 2021-22 காரீப் சந்தை பருவம் தொடங்கும் முன்பு அக்.1-ம் தேதி முதல் தங்கள் பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் நாளை தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறுவை பருவ நெல் அறுவடை அக்.1-ம் தேதிக்கு முன்னரே தொடங்கப்பட்டு,நெல் வரத்து இருந்து வருகிறது. இந்தசூழலில், இணையவழி பதிவுக்குபதில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, உழவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் இணைய வழியிலோ, ஏற்கெனவே இருந்த நடைமுறையிலோ நெல்லை விற்பனை செய்யலாம் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com