

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பல்லடம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளன.
வாக்காளர் விவரம் மற்றும் சமூகக் காரணிகள்:
பல்லடம் தொகுதியில் 18 முதல் 25 வயதுடைய இளைய தலைமுறை வாக்காளர்கள் 13.3% ஆக உள்ளனர். 51% பெண் வாக்காளர்களுடன் பெண்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். சமூக ரீதியாக, வெள்ளாள கவுண்டர்கள் 34%, அருந்ததியர்கள் 16%, நாயுடு சமூகத்தினர் 11%, முக்குலத்தோர் 10% மற்றும் ஒக்கலிக கவுண்டர்கள் 10% என உள்ளனர். மற்ற சமூகத்தினர் 19% உள்ளனர். இது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் கலந்த ஒரு தொகுதியாகும்.
உள்ளூர் பிரச்சனைகள்:
இங்குள்ள பிராய்லர் பண்ணைகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகக் குறைந்து வருவது மற்றும் நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் அன்றாடக் கவலைகளாக உள்ளன. விசைத்தறித் தொழிலாளர்களின் நீண்ட காலப் போராட்டமான கூலி உயர்வு பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது ஒரு முக்கிய அரசியல் காரணியாக உள்ளது.
பல்லடம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் முடிவுகள் ஒப்பீடு (2021 vs 2024):
2021-ல் அதிமுக 48.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 42.8% வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. அதே சமயம் அதிமுக 47.9% என்ற நிலையிலேயே தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி சுமார் 7% வாக்குகளைப் பெற்றுள்ளது.
2026 தேர்தல் கணிப்பு - பூத் லெவல் ஆய்வு:
2024-ல் திமுக 134 பூத்களில் வலுவாக உள்ளது. அதிமுக 106 பூத்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. வரும் 2026 தேர்தலில், அதிமுக 110 பூத்களிலும், திமுக 90 பூத்களிலும் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. சுமார் 45 பூத்கள் ஸ்விங் பூத்களாக இருப்பதால், இங்குப் போட்டி மிகவும் நெருக்கடியாக இருக்கும்.
கான்சிலிடிக்ஸ் கணிப்பின்படி, வரும் தேர்தலில் அதிமுக 37% வாக்குகளையும், திமுக 33% வாக்குகளையும் பெறும். இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 4% மட்டுமே வித்தியாசம் இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி இணைந்து 26% வாக்குகளைப் பிரிக்கும். இது ஒரு நெக்-டு-நெக் போட்டியாக இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி பல்லடம் தொகுதியில் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்