
திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளதால், குடமுழுக்கு விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடமுழுக்கு விழா நடத்த எந்த தடையும் இல்லை என கூறி, இந்த விழாவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.