கைக்குழந்தையை மூதாட்டியிடம் விட்டுச் சென்ற பெண்...பெயர் சூட்டிய ரயில்வே போலீசார்!

கைக்குழந்தையை மூதாட்டியிடம் விட்டுச் சென்ற பெண்...பெயர் சூட்டிய ரயில்வே போலீசார்!
Published on
Updated on
1 min read

வளர்ப்பதற்கு சிரமப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற கைக் குழந்தையை, ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் 3 மாத பெண் குழந்தையை, மூதாட்டி ஒருவரிடம் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் வைத்துக் கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் மூதாட்டி குழந்தையை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார். அதன்பிறகு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசாருக்கு, அந்த பெண் கணவர் குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், அந்த பெண்ணை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கண்டு பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், குழந்தையை பராமரிக்க முடியாமல் விட்டுச் சென்றதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பெற்றோருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர். மேலும் குழந்தைக்கு பெயரிடப்படாமல் இருந்ததால் "தமிழ் மகள்" என்றும் பெயர் சூட்டினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com