71 -ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு உள்ளது. திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. CBFC (Central Board Of Film Certification ) விருதாளர்கள் பெயரை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த “பார்க்கிங்” படம் திரையரங்குகளில் மட்டுமல்லாது ott தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படம் சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகளை தட்டிச்சென்றது. நாயகன் ஹரிஷ் கல்யாண் தனக்கே உரித்தான நடிப்பால் அசத்தியிருப்பார். படத்தில் கீழ் வீட்டுக்காராக நடித்திருந்த எம்.எஸ் பாஸ்கர் படம் வெளியானபோதே தனது அட்டகாசமான நடிப்புக்காக பல பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மாலை முரசுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
பார்க்கிங் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
இத்திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்திருப்பது எனக்கும் எங்களுடைய பட குழுவினருக்கும் ரொம்ப சந்தோஷமான விஷயம்.
படத்தில் நடித்திருக்க கூடிய எல்லோருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது, எல்லோருக்கும் மகிழ்ச்சியான தருணம் இது
விருதுகள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இத்திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
மக்களுக்கு பிற கதைக்களம் உள்ள படங்களில்தான் நடிக்கிறேன்.
தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு படக்குழுவினர் மற்றும் பாஸ்கர் சார் மற்றும் எல்லோருக்கும் சந்தோஷம்தான்.
சினிமா துறையில் இருந்து நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
நான் தமிழ் மக்கள் மற்றும் இன்னும் நிறைய பேருக்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
ஹரிஷ் கல்யாண் உண்மையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார், சமீபத்தில் அவர் நடிக்கும் படங்கள் இயல்பானதாகவும் மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவுமே இருக்கிறது. அவரின் கடைசியாக நடித்த ‘லப்பர் பந்து என்ற திரைப்படம் கூட வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நாள் வெற்றியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.