தேங்கி நிற்கும் கழிவு நீரால் பாதிக்கப்படும் மக்கள் வைத்த கோரிக்கை!

தேங்கி நிற்கும் கழிவு நீரால் பாதிக்கப்படும் மக்கள் வைத்த கோரிக்கை!
Published on
Updated on
1 min read

மதுரையில் துரைசாமி நகர் அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் விவேக் நகர் என்னும் பகுதியில் புதிய கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இருப்பதாலும், அதே சமயம் ஏற்கனவே உள்ள கழிவு நீர் குழாய் பழுதடைந்து காணப்படுவதால், சாலையில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

இதன் மூலம் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com