
சாதிப் பெருமை (caste pride) தமிழ் மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய "caste pride" என்ற நூலினை "சாதிப் பெருமை" என்ற பெயரில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
சாதியின் பெயரால் இந்தியாவில் நிலைபெற்ற தீண்டாமைக் கொடுமைகளையும், சாதிகள் குறித்த தேசத் தலைவர்களின் கண்ணோட்டங்களையும், குற்றங்களுக்கான தண்டனைகள் சாதிப் படிநிலை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதை விளக்கும் வழக்குகள் என பல்வேறு தகவல்களை இந்நூல் பதிவு செய்கிறது. நிகழ்ச்சியில் முதலாவதாக நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புத்தக நூலாசிரியர் மனோஜ் மிட்டா, புத்தக மொழிபெயர்ப்பாளர் ஆர்.விஜயசங்கர், திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து "சாதிப் பெருமை" புத்தகத்தில் சொல்லப்பட்ட பல்வேறு தகவல்களை விவரித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கொண்டாடும் நேரத்தில் பெரியார் பேசிய சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கி அதே பெயரில் நடைமுறைப்படுத்தினார் பேரறிஞர் அண்ணா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதை நினைத்து நான் பெரிதும் மகிழ்கிறேன். மொழிபெயர்ப்பாளர் விஜயசங்கர் மிகவும் முற்போக்கானவர். தெய்வபக்தி இருந்தாலும் நம்மவர் தான் அவர். எம்பி.ரவிக்குமார் இந்த புத்தகத்தை படிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நானும் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன். அப்போது தமிழில் வர வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.
திராவிட அரசியலை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அரசியலுக்கு ஒரு அரணாக இந்த புத்தகம் இருக்கிறது. மிக ஆழமான கருத்துக்களை எழுதியிருக்கிறார். இந்த ஒரு தொகுப்பிற்காக அவருக்கு 7 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இருந்தாலும் இந்தியா முழுவதும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான வன்முறைகளை எழுதுவதுதான் அவரின் கனவு. அது குறித்து பல ஆய்வுகளை முற்பட்டிருக்கிறார். அதில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது இதுவே இப்படி இருக்கிறது என்றால் பிரிட்டிஷ் ஆட்சியில் எப்படி இருந்திருக்கும் பல புத்தகங்கள் எனக்கு கிடைத்தது. அதெல்லாம் எனக்கு பொக்கிஷம் என்கிறார்.
நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என விடுதலை போராட்ட வீரர்கள் சாதி என்கிற சமூக கூறு குறித்து சிந்திக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார்.
மிக ஆழமான தரவுகளை செய்திகளை நமக்கு தருகிறது. இந்த புத்தகம் படித்தால் திராவிட அரசியல் இன்றியமையாத தேவை என்பது புரியும்.
கலப்பு திருமண சட்டம் பித்தல்பாய் பட்டேல் 1915 ல் central legislative assembly ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1918ல் அம்பேத்கர் போராட்டக் களத்தில் இருந்தாலும் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் அவர் காலத்தில் இப்படிப்பட்ட பட்டேல் இருந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் சமுத்துவத்தை உயர்த்தி பிடிக்கவில்லை, சாதி என்று வரும் போது மாகாத்மா காந்தி மகாத்மா ஆக இல்லை
சாதி குறித்து வரும்போது கௌரவ வேடத்தில் நேரு வந்து போனார், நேரு சீர்த்திருத்ததை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கவனித்து பார்க்க வேண்டும்.
ஒரு சார்பு இல்லாத ஆய்வாக இந்நூல் இருக்கிறது. அம்பேத்கர் மற்றும் காந்தி குறித்து அவர்களின் நிலைப்பாடு குறித்து இந்நூலில் உள்ளவற்றை பார்க்க வேண்டும். அப்போது இருந்த காங்கிரஸ் வேறு இப்போதுள்ள காங்கிரஸ் வேறு, இப்போது ராகுல் காந்தி தலைமையில் மதச்சார்பின்மையை காப்பாற்ற காங்கிரஸ் உயர்த்தி பிடிக்கிறது. உடனே காங்கிரஸ்ஸை திருமாவளவன் இப்படி பேசி விட்டார் என திருத்திப் பேசுவார்கள்.
அம்பேத்கர் மகாத்மா காந்தி குறித்து பல கருத்துக்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது.
இந்திய மண் முழுவதும் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் எதை தொட்டாலும் சாதியை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்கிறார்கள்.
பிராமணர்களை நாங்கள் வெறுப்பதில்லை. அவர்களை பற்றி படிக்க வேண்டும் என்றால் முதலில் பெரியாரை படிக்க வேண்டும். அதன் பிறகு இந்நூலை படிக்க வேண்டும். என்னை சாதி தலைவர் என குறிப்பிடுகிறார்கள் ஏன் தெரியுமா? நான் பெரியாரை படித்திருக்கிறேன் என்பதால் தான், நான் ஏன் திமுக வை ஆதரிக்கிறேன். பெரியாரை பயின்றவன் நான் அதனால் நான் திமுகவை ஆதரிக்கிறேன்.
திமுகவுடன் 2 சீட்டுக்காக இருக்கிறார்கள் என சொல்லுகிறார்கள் அதை கூட சிலரால் வாங்க முடியவில்லை. இதில் என்ன பெருமை இருக்கிறது.
பாஜக சராசரியான அரசியல் கட்சி இல்லை . கருத்தியல் பின்னடைவை சரி செய்ய இன்னும் 50 ஆண்டு ஆகும். அந்த அளவிற்கு 10 ஆண்டுகளில் பாஜக கருத்தியல் பின்னடைவு, ஆதிக்க வெறியை காட்டுகின்றனர். சாதி பெருமை என்கிற பெயரில் ஊக்கப்படுத்தும் படுகிறார்கள்.
ஆண்ட சாதி என்கிற பெருமை பேசுகிறார்கள் ஆனால் உன் மொழி, உரிமை, புதிய சட்டம் கொண்டு வந்து உன் உரிமையை பறிக்கப்படுவது தெரிவதில்லை. இந்துக்களை ஒருங்கிணைப்பது என்பது சாதி பெருமை மட்டும் தான் தேவைப்படுகிறது” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.