மக்கள் நீதி மய்யம் - 6-ம் ஆண்டு துவக்க விழா - மரக்கன்றுகள் அன்பளிப்பு

மக்கள் நீதி மய்யம் - 6-ம் ஆண்டு துவக்க விழா - மரக்கன்றுகள் அன்பளிப்பு
Published on
Updated on
1 min read

கமல்ஹாசன் வேண்டுகோள்

ஆண்டு துவக்க  விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொடியேற்றி மரக்கன்று வழங்குதல்

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றம் நிகழ்ச்சி தமிழக முழுவதும் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை வடகிழக்கு மாவட்டம் சார்பில் சித்ரா பகுதியில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு மரகன்றுகளை வழங்கினர்.

வடகிழக்கு மாவட்ட  செயலாளர் மனோன்ரம்யன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாநிலச் செயலாளர் பரப்புரை மேற்கொண்டார்.இந்நிகழ்வில் டாக்டர்.அனுஷாரவி
மண்டல செயலாளர் ரங்கநாதன் - சித்திக் - செல்வ தங்கம் - ஸ்ரீதர் - அருணா - திருமதி. ரம்யா அவர்கள் மண்டல அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com