
31 ஆண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவுடனேயே, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இந்த உத்தரவை வரவேற்றனர்.
இதை தொடர்ந்து நேற்று மாலை பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது தனது விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக பேரறிவாளன் வைகோவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பேரறிவாளன் விடுதலை தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாக கூறினார்.