நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்த டீசல் விலை..!

நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்த டீசல் விலை..!
Published on
Updated on
1 min read

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப  பெட்ரோல், டீசல் விலையை  எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.  இதனால் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருந்தது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் சில தினங்களுக்கு முன் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல் விலையேற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வந்த சாமானியர்கள் மத்தியில் இது சற்று ஆறுதலை தந்துள்ளது.

இந்நிலையில் இன்று டீசல் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 19 காசுகள் குறைந்து 94 ரூபாய் 20 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி 99 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com