பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

இந்தியா முழுவதும் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகின்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Published on: 
Updated on: 
1 min read

இராமநாதபுரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

கோட்டாட்சியர் சீல்

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐந்து வருடங்களுக்கு தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. 

இந்தியா முழுவதும் முடக்கப்பட்ட அலுவலகங்கள்

இந்த அறிவிப்பை அடுத்து தங்களுடைய பணிகளை நிறுத்திக் கொள்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் எதிரே  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட அலுவலகம் உள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன் தலைமையில் அங்கு சென்ற வட்டாட்சியர் முருகேசன் மற்றும் போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவில் மாவட்ட செயலாளர் சேக் தாவூது முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்பு சீல் வைத்ததற்கான அறிவிப்பு நோட்டீசினை நுழைவாயிலில் ஒட்டி சென்றனர். பாப்புலர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com