ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் திட்டம்... செயல்படுத்தும் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு...

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் திட்டம்... செயல்படுத்தும் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு...
Published on
Updated on
1 min read

நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு கடிதம் மூலம்   அறிவுறுத்தியிருந்தது. மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டு இருந்தது. அதேப்போல இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழக்கவும் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரும்,  உறுப்பனராக நில நிர்வாக ஆணையரும் , உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com