“ராமதாஸை கொலை செய்து கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி” - செய்தியாளர் சந்தித்த எம்.எல்.ஏ அருள் குற்றச்சாட்டு!

பத்தாயிரம் பணம் கட்டி வாங்குகிறார்கள் என சொல்லப்படுகிறது. அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்...
“ராமதாஸை கொலை செய்து கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி” - செய்தியாளர் சந்தித்த எம்.எல்.ஏ அருள் குற்றச்சாட்டு!
Published on
Updated on
2 min read

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தற்போது தனது கட்சி அதிகாரத்தையே இழந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான் என்பது நாடறிந்த உண்மை. தனது அரசியல் வாரிசாக அன்புமணியை உருவாக்கிய ராமதாஸ், மகன் ஒருகட்டத்தில் தன்னை தாண்டி சென்று விடுவார் என்பதை உணராமல் இருந்தது தான் இதற்கு காரணம்.

இதனை தொடர்ந்து தற்போது தந்தை மற்றும் மகன் இருவருக்கும் இடையே மோதல் நடைபெற்றுக் கொண்டிருப்பது தமிழ்நாடே அறிந்த ஒன்றாக உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்க்கமான தீர்ப்பை அளித்த பிறகும் தந்தையும் மகனும் மாறி மாறி கட்சியை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கிறர்கள். இந்நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஏகே மூர்த்தியின் மகன் திருமண விழாவை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்திய நிலையில் அதில் கலந்து கொண்ட பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “இன்று அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாமக என்றாலே மருத்துவர் ஐயா தான். கட்சிக்காக 36 ஆண்டுகள் உழைத்தவர். தேர்தல் ஆணையத்தில் சில குளறுபடிகளை செய்து பாமக தலைவர் என்ற உத்தரவை அவர்கள் பெற்றார்கள். இதை எதிர்த்து நாங்கள் மருத்துவர் அய்யா சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியதில் எங்களுக்கு நீதி கிடைத்தது. பாமகவில் தலைவர் என்ற பதவி இப்போது இல்லை நிறுவனர் என்ற பதவி மட்டும் தான் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் இப்போது பாமக கட்சியினரை ஏமாற்றும் நோக்கில் மாயாஜாலம் வித்தை காட்டி இன்று பனையூரில் விருப்பமனு வாங்குவதாக சொல்கிறார்கள்.அதுவும் பத்தாயிரம் பணம் கட்டி வாங்குகிறார்கள் என சொல்லப்படுகிறது. அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றக்கூடிய விஷயம். மேலும் நீதிமன்றத்தையும் ஏமாற்றுகிறார்கள். இது குறித்து டி.ஜி.பி.க்கு மருத்துவர் அய்யா தரப்பில் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

Admin

மருத்துவர் அய்யா தரப்பில் பாமக செய்தி தொடர்பாளர்கள் என்ற அடிப்படையில் உங்களிடம் இதனை தெரிவிக்கிறேன். பாமக தரப்பினர் யாரும் இதனை நம்ப கூடாது. ரூ.10 ஆயிரம் வாங்கக்கூடாது. இப்போது டி.ஜி.பி.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையமும் இதைத்தான் சொல்கிறது. அன்புமணி தரப்பில் தான் சிவில் கோர்ட்டுக்கு போக வேண்டும். தீர்ப்பை அன்புமணி தரப்பு முழுவதும் படிக்கட்டும்.

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பொய்யாக மக்களை ஏமாற்றி பத்தாயிரம் பணம் பறிக்கிறார்கள். பாலு போன்ற ஆங்கிலம் தெரியாத வழக்கறிடம் இதனை கொடுத்து படிக்க வைத்துள்ளார்கள். நீங்கள் உயர்நீதிமன்றத்தை ஏமாற்றுகிறீர்கள். சில பத்திரிக்கையாளர்களை அவர்கள் விலை கொடுத்து வாங்கிவிட்டு பொய்யான தகவலை பரப்புகிறார்கள். மீண்டும் நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்‌. யாரும் விருப்பமனு கொடுக்க வேண்டாம்.

மருத்துவர் ஐயா பின்பு இருப்பவர்கள் துரோகிகள் இல்லை அன்புமணி தான் துரோகி. ராமதாஸை கொலை செய்ய பார்க்கிறார் அன்புமணி. ராமதாஸை கொலை செய்து கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி. கூட்டணி பேச்சுவார்த்தைக்கும், பாமக கூட்டணியை முடிவு செய்யவும் ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிக்கூட்டணி அமையும். தைலாபுரம் தோட்டத்தில் வந்து யார் கையெழுத்து போடுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் முதல்வர் ஆவார்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com