பூட்டிய அறையில் நடந்த விவாதம்..! பாமக மீது ஏன் இவ்வளவு கரிசனம்!? அடுக்கடுக்காய் எழும் கேள்விகள்!!

“நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு உள் அர்த்தம் கற்பிக்கக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு கட்சி பிரச்சனையை...
anbumani ramadoss
anbumani ramadoss
Published on
Updated on
2 min read

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தற்போது தனது கட்சி அதிகாரத்தையே இழந்துவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான் என்பதை நாடறிந்த உண்மை. தனது அரசியல் வாரிசாக அன்புமணியை உருவாக்கிய ராமதாஸ், மகன் ஒருகட்டத்தில் தன்னை தாண்டி சென்று விடுவார் என்பதை உணராமல் இருந்தது தான் இதற்கு காரணம்.

அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட  மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 

புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது,  என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி கட்சியின் நலன்  கருதி இரு தரப்பையும் நேரில் சந்தித்து நேற்று பேச அழைப்பு விடுத்திருந்தார், ராமதாஸ் காணொளி வாயிலாகவும் அன்புமணி நேரிலும் வந்து நீதிபதியிடம் பேசினர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்னர், நேற்று மாலை அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடை இல்லை என தீர்ப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று அன்புமணி தலைமையில் பாமக -வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டுகாலம் நீட்டித்து பொதுக்குழுவில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு திருக்கச்சூர் ஆறுமுகம் ஜிகே மணி ஏ கே மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட ராமதாஸ் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் ராமதாசும் கலந்துகொள்ளவில்லை. பாமக நிறுவனர் இல்லாமல் நடக்கும் இந்த முதல் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து தனியார் செய்தி ஊடகத்தின் உரையாடலில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சுகுணா திவாகர் பேசுகையி, “நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு உள் அர்த்தம் கற்பிக்கக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு கட்சி பிரச்சனையை நாடறிந்த பிரச்சனையை பூட்டிய அறையில் விசாரிக்க வேண்டிய அவசியம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை.  ஏனெனில் வாராவாரம் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.  சமீப காலமாக வழக்குகளின் போக்கை நீதிபதிகள் மாற்றுவதை காண்கிறோம், உதாரணத்திற்கு அஜித் குமார் காவல் விசாரணை மரணத்தின்போது ஆர்பாட்டம் நடத்த தவெக அனுமதி கேட்டால் ஒன்று அனுமதி கொடுக்கலாம், இல்லையெனில் அனுமதியை மறுக்கலாம் அதைவிட்டுவிட்டு, “நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக மனைவியை அடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்” என்கிறார்கள் நீதிபதிகள்,  பாமக விவகாரம் போன்ற உட்கட்சி பிரச்னைகளை மூடிய அறையில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை..” என பேசியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com