
பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
இந்நிலையில் கடந்த 9 -ஆம் தேதி அன்புமணி பாமக பொதுக்குழுவை கூட்டினார், ஆனால் இந்த மாநாட்டை நடத்த கூடாது என ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் நலன் கருதி உயர்நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தம் செய்து அன்புமணி பொதுக்குழு நடத்தும் வகையில், பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில் “பொதுக்குழுவை கூட்டி மீண்டும் தலைவராகி கட்சியை கைப்பற்றிவிட்டார் அன்புமணி. பெரும்பாலான நிர்வாகிகள் அன்பு மணியோடுதான் இருக்கின்றனர், ஏற்கனவே 40% ஓடுகள் விஜய் பக்கம் சென்றுவிட்டது என்று சொல்கிறார்கள், பாமக கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் கட்சி பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது வீண். ஏற்கனவே ஓபிஎஸ் விஷயத்திலே பார்த்தோம். மேலும் கட்சி, பணம், தொழில்நுட்பம் எல்லாமே அன்புமணியிடம் தான் உள்ளது. ஆனால் ஓட்டு யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கிய கேள்வி. ஏனெனில் தந்தை - மகன் இருவரும் சேர்ந்து கட்சிக்கு கொள்ளி வைத்துவிட்டனர் என்பதுதான் உண்மை” என சொல்லியிருந்தார்.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தான் நேற்று ராமதாஸ் தலைமையிலான மகளிரணி மாநாடு நடைபெற்றது. எல்லா நிர்வாகிகளும் அன்புமணி பக்கம் நிற்கும் சூழலில் மாநாடு நடத்துவது எப்படி சாத்தியம் என்ற பல கேள்விகள் எழுந்தன. ஆனால் நிறுவனர் ராமதாஸ்-க்கான மக்கள் எப்போதும் போல அவரை பார்க்க வந்தனர்,ஆனால் மயிலாட்டம், ஒயிலாட்டம், என மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில், ஜி.கே மணி, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, எம்.பி., எம்.எல்.ஏ என பலர் கலந்துகொண்டனர், இவர்களோடு ராமதாஸின் மூத்த மகளான காந்திமதியம் உடன் இருந்தார். இந்த பொதுக்குழுவை துவங்கி வைத்து பேசிய ராமதாஸ், “வரக்கூடிய தேர்தலில் பாமக -தன்னுடைய எண்ணத்திற்கே போட்டி போடும், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது” என பேசியிருந்தார். இதையெல்லாம் விடவும் மாநாட்டில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அது ராமதாஸ் -ன் மகள் காந்திமதிதான். “மாநாட்டில் காந்திமதிதான் முதல் தீர்மானத்தை வாசித்தார்”. ராமதாசால் இளைஞரணி செயலாளர் ஆக்கப்பட்ட முகுந்தனின் தாயாரும், ராமதாஸின் மூத்த மகளுமான காந்திமதிக்கு கட்சி நிர்வாகிகள் மேடையில் இடம் கொடுத்ததன் மூலம் தனது அரசியல் வாரிசாக மகளை ராமதாஸ் முன்னிருத்த வாய்ப்புண்டு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்”
அன்புமணிக்கு ஆபத்து
ஏற்கனவே அன்புமாய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி மகனின் இமேஜை காலி செய்துள்ளார் நிறுவனர், மேலும் அன்புமணி பண பிரியர் என்ற எண்ணம் மக்களுக்கும் ஓரளவுக்கு எழத்துவங்கியுள்ள இந்த சூழலில்,ஒருவேளை ராமதாஸ் மகளை அரசியல் வாரிசாக அறிவித்தால் அது அன்புமணிக்கு பெரும் பின்னடைவாகும். இதனால் அன்புமணி செய்வதறியாது கலங்கி பொய் உள்ளதாக சொல்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.