ட்ரோன் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவு...

புதுச்சேரி நகரப்பகுதிகளில் ட்ரோன் பறக்க தடைவிதித்து அம்மாநில காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
ட்ரோன் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவு...
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று காலை கடற்கரைசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தலைமை செயலகம் மற்றும் அதன் அருகில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்தின் மேல் இரண்டு ட்ரோன்கள் பறந்தபடி படம்பிடித்தது.

இதனைக்கண்ட துதரக பாதுகாவலர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து ட்ரோன் பறக்கவிட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி புதுச்சேரி நகரில் வெள்ளை நகரப்பகுதிகளில் உள்ள ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம், பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகள் ட்ரோன் பறக்க தடைசெய்யப்பட்ட சிகப்பு மண்டலங்களாக காவல் துறை இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது. மேலும் பிரெஞ்சு துணை தூதரகம் போலீசாரின் தீவிர கண்காணிபில் உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com