“குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய தலைமை காவலர்” - துரத்தி பிடித்த பொதுமக்கள்.. ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட அவலம்!

விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட முருகேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த
“குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய தலைமை காவலர்” - துரத்தி பிடித்த பொதுமக்கள்.. ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட அவலம்!
Admin
Published on
Updated on
1 min read

சென்னை மடுவன்கரை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெருங்குடியை சேர்ந்த 57 வயதான முருகேசன் மீது, எதிர் திசையில் தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் செந்தில் ஒட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் போன காரை அங்கிருந்த பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்று கத்திபாரா மேம்பாலத்தில் பிடித்துள்ளார். விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட முருகேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொதுமக்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிண்டி போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு போலீசார் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவலர் செந்தில் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் காவலர் செந்தில் தரமணி ரயில் நிலையத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி  தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர்  மற்றும் அவரது உறவினர்களுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com