விரக்தியின் உச்சத்தில் இருந்தாரா உன்னிகிருஷ்ணன்... தற்கொலைக்கு காரணம் என்ன..?

சென்னை ஐஐடி தற்காலிக கௌரவ விரிவுரையாளர் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை.
விரக்தியின் உச்சத்தில் இருந்தாரா உன்னிகிருஷ்ணன்... தற்கொலைக்கு காரணம் என்ன..?
Published on
Updated on
2 min read
நாட்டிலேயே முதன்மை கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் விளங்குகிறது. இதனாலேயே இதில் சேர்ந்து படிப்பதற்கு போட்டி அதிகமாக இருக்கும். படிப்பதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். கல்வியில் முதன்மையாக விளங்கும் ஐஐடி நிறுவனம், மர்மங்களுக்கும் பேர்போனதாக இருக்கிறது. 
கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.  இறப்பதற்கு முன்பு அந்த மாணவி மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால் படிக்க முடியவில்லை. அதனால் தற்கொலை முடிவிற்கு செல்கிறேன் என்று பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.  மாணவி இறப்பு குறித்து பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது போலீசார் விசாரணை நடத்தினர். 
மற்றொரு சம்பவமாக சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக பேராசிரியர் விபின் தனது ஐஐடி பேராசிரியர் பதவியில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்தார். இது சென்னை ஐஐடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே சாதி மற்றும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அதனால் அவர் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட உன்னிகிருஷ்ணன் உறவினர் ஷாஜி வர்கீஸ் அளித்த பேட்டியில்,
உன்னி கிருஷ்ணனின்  மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. மரணத்திற்கான காரணம் என்ன என கடிதம் எழுதி வைத்துள்ளார். அதை காவலர்களிடம் காட்டியுள்ளோம்.  முதற்கட்ட வேலையாக தற்போது உன்னிகிருஷ்ணனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து ஊருக்கு எடுத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறோம். எத்தனை மணிக்கு உன்னிகிருஷ்ணன் இறந்துபோனார் என சரியாகத் தெரியவில்லை. காவல்துறையினருக்கு 6 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவக் கிடைத்த சில மணி நேரங்களில்  அவரது தந்தைக்கு போன் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். நான் சென்னையில் வசித்து வருவதால் என்னிடம் இது குறித்த தகவலை தெரிவித்தனர் இரவு பத்தரை மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை கோட்டூர் புரம் காவல் நிலையத்திற்கு போலீசார் விசாரணைக்கு அழைத்தனர், அதன்பேரில் நானும் உன்னிகிருஷ்ணனின் தந்தையும் நேரில் வந்தோம் ஐஐடி வளாகத்திற்குள் எத்தனை மணிக்கு உன்னிகிருஷ்ணன் உள்ளே வருகிறார் எங்கெல்லாம் செல்கிறார் என சிசிடிவி காட்சிகளை  எங்களிடத்தில் காண்பித்தார்கள்.
தற்கொலை கடிதம் படித்தபோது அதில் எந்தவித சந்தேகப்படும்படியான விஷயங்களும் குறிப்பிடப்படவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் போலவே அது இல்லை. வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்தில் இருந்த ஒரு நபர் தனது வாழ்வின் மீது வெறுப்படைந்த ஒரு நபர் எழுதிய கடிதம் போல இருந்தது, சொந்த வாழ்க்கையயை கையாள தெரியாமல் இருந்தார் என்பது கடிதம் மூலம் தெரியவந்தது.
மேலும் கடிதத்தைப் படிக்கும் பொழுது தனது சொந்த பிரச்சனை காரணமாகவோ, குடும்ப காரணமாகவோ அல்லது ஐ.ஐ.டி நிர்வாக பிரச்சனை காரணமாகவோ தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. தினமும் மூன்று முறையாவது தனது தந்தை தாய் குடும்பத்தினரிடம் சாதாரணமாக உன்னிகிருஷ்ணன் பேசி வந்திருக்கிறார். சம்பவம் நடந்த நேற்று மதியம் கூட தனது தாயிடம் மிகவும் இயல்பாக வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
மிகவும் இயல்பாக இருந்த நிலையில்,  உன்னிகிருஷ்ணன் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் யாரையும் நாங்கள் குற்றம் சுமத்த விரும்பவில்லை. குடும்பம் இயல்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். ரகுவிற்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் உன்னி கிருஷ்ணன் இரண்டாவது மகன் பள்ளியில் படித்து வருகிறார் என்றார்.
விசாரணையின் முடிவில்தான் உன்னிகிருஷ்ணனின் மர்மம் 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com