
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் களைக்கட்டியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என போற்றப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி திருச்சியின் சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.