
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பஜார் பகுதியில் புத்தாடைகள் பொங்கல் வைப்பதற்கான தேவையான , பூஜைக்கு தேவையான , கரும்பு , மஞ்சள் , பூ , பழம் , வாங்குவதற்கு திருத்தணியில் பொதுமக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு திருத்தணியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
திருத்தணியில் பஜார் பகுதி , பஸ் நிலையம் , அரக்கோணம் சாலை , சித்தூர் சாலை , மலைக்கோயில் அடிவாரம் , பாரத வங்கி பகுதி , போன்ற இடங்களில் 40 இடங்களில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யாமல் உள்ளதால், இந்த பொங்கல் திருவிழாவிற்கு பஜார் பகுதிக்கு வரும் பொது மக்களின் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
பாதுகாப்பு கேள்விக்குறி?
மேலும் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள் மற்றும் உடமைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலை எழுந்துள்ளது உடனடியாக காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்வதற்கு பழுது நீக்கி விரைந்து கண்காணிப்பு கேமரா மூலமாக காவல்துறையினர் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தணி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்......