பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை - அமைச்சர்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தின அரசு விழாவில் பங்கேற்றார்.
பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை - அமைச்சர்
Published on
Updated on
1 min read

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பில் பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை, அவரவர்களின் நியாயவிலை கடைகளிலேயே வழக்கம்போல் பெற்றுக்கொள்ளலாம் என பேட்டியளித்தார்.

சிவகங்கையை அடுத்துள்ள பையூர் கிராமத்தில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293வது பிறந்த நாள் விழாவானது அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை எனவும் வழக்கம்போல் அந்தந்த நியாயவிலைக்கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் என்றும் 12 கோடி கரும்புகள் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலையில் 2.19 கோடி கரும்புகள் பயனாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார். எதிர்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசு தொகையாக ரூ5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கவில்லை கொரோனா நிவாரன தொகையே 5 ஆயிரம் வழங்க கோரிக்கைவிடுத்தோம் என்றும் அதனை தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர் என்றும் பேசினார்.

சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்களுக்கான பயிற்சி பள்ளி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் அது குறித்து முதல்வரிடம் சட்டமன்றத்தில் அறிவுருத்துவோம் என தெரிவித்ததுடன் நியாய விலைக்கடைகள் நவீனமயமாக்கப்படும் என்பது கடைகள் புதுப்பிக்கப்பட்டு சுத்தமான முறையில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தமிழகம் முழுவதுமுள்ள 4500 கூட்டுறவு தொடக்க கடன் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் 2000 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மற்ற கடன் சங்கங்களிலிருந்து கிடைக்கப்பெரும் வருமானத்தை வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. படிபடியாக அனைத்து கடன் சங்கங்களும் சீர் செய்யப்படும் என தெரிவித்தார். உடன் அரசு அதிகாரிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் இருந்தனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com