பூவிருந்தவல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூவிருந்தவல்லியில் இருந்து முல்லா தோட்டம் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓட்டுநா் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களுக்காகவும், மெட்ரோ ரயில் இயக்கிய போது மின்சார ஒயர்கள் அருந்தும் மின்சார பெட்டி வெடித்து தீப்பொறி பரவியதாலும் சோதனை ஓட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயர் மற்றும் மின்சார பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் படிக்க: அரசு போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
பின்னா் இரவு 11.30 மணி அளவில் ஓட்டுநா் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மெட்ரோ ரயில் ஓட்டுநா் இல்லாமல் தானாக இயங்கிய நிலையில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கைகளை அசைத்து உற்சாகமாக பயணம் மேற்கொண்டனா்.
சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் பின்னர் மீண்டும் நள்ளிரவு 12.30 மணி அளவில் பணி மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்