“மின் கட்டண உயர்வு மக்களை பாதிப்படைய செய்யும்” - கே.எஸ்.அழகிரி.

“மின் கட்டண உயர்வு மக்களை பாதிப்படைய செய்யும்” - கே.எஸ்.அழகிரி.
Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ' கையோடு கைகோர்ப்போம்' ,  இந்திய ஒற்றுமை பயண நினைவு கல்வெட்டினை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்பொழுது  தமிழக அரசு வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்களை பாதிப்படைய செய்யும் ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த மின் கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை  மக்களால் தாங்க முடியாது எனவும்  கூறினார்.


மேலும், ரயில்வே சாலை உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்த கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், தொழில் வளர்ச்சி மேம்பட ரயில்வே சாலை விமானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தினால் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும் எனவும், இதனை மத்திய அரசு கடந்து ஒன்பது ஆண்டுகளில் செய்யவில்லை என்பதை அறிந்து தமிழக ஆளுநர் வெளிநாட்டு மூலதனம் வராது என சொல்லி இருப்பது அபசகுனமாகும் என்றும் கூறியுள்ளார்.

அதையடுத்து, உத்திரபிரதேசம் பீகார் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை விட அனைத்து  துறைகளிலும் தமிழ்நாடு அரசு முன்னேறி உள்ளது என்றும் கூறினார். 

மேலும், ரயில்வே வாரியம் முழுமையாக செயல்படாதது தான் ஒடிசா ரயில் விபத்து நடைபெற்றது என்றும், இதற்கு முழுக்க முழுக்க மனித தவறுதான் காரணம் என்று சாடியவர், இதற்கு எந்த ஒரு அமைப்பையும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரை  சந்தித்து காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளதுஎன்றும் குறிப்பிட்டார். 

மேலும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார் என்றும், முருகன் பெயரை வைத்துள்ள செந்தில் பாலாஜி கூறுவதை நம்புவோம் என்றும் கூறினார். 

அதோடு, அனைத்து எதிர்கட்சிகளையும்  ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவம், காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரு அணியாக திரட்டுவோம் எனக்கூறியவர்,  இந்த அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது ஒரு பிரச்சனை அல்ல கூட்டணியில் பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது எனவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com