மின்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே மின்வெட்டு! "ஜெனரேட்டர் மாற்றும்போது.." - சமாளிக்கும் நிர்மல் குமார்?

தமிழகம் முழுவதிலும் இருந்து மின்வெட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Minister Nirmal Kumar
மின்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே மின்வெட்டு! "ஜெனரேட்டர் மாற்றும்போது.." - சமாளிக்கும் நிர்மல் குமார்?
Published on: 
Updated on: 
1 min read

மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

நிர்மல் குமார் சட்டம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தவெக ஆட்சிக்கு வந்தது முதல் மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு சற்று முன்னர்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர். அப்போது, தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலை சீரமைக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ, அவை அனைத்தும் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

நிகழ்ச்சிக்குப் பிறகு மின்வெட்டு குறித்து விளக்கமளித்த நிர்மல் குமார், நிகழ்ச்சி ஜெனரேட்டர் மூலம் நடைபெற்றதாகவும், ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மாற்றும்போது 5 நொடிகள் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் நிகழ்ச்சியில் நிர்மல் குமார் மாணவர்களிடையே உரையாடும்போதும், நீதிபதி உரையாடும்போதும் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 5 நிமிடங்கள் வரை மின்வெட்டு நீடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Minister Nirmal Kumar
வீடியோ Shadow-ஆக இருக்குன்னு எப்படி தெரியும்? திமுகவின் அந்த மிகப்பெரிய 'பவர் சென்டர்' யார்? - அமைச்சர் நிர்மல் குமார்
Minister Nirmal Kumar
வீரமணி வழக்கில் பல கோடி பேரம் பேசப்பட்டதா?.. “இதில் ஸ்டாலின் என்ன செய்தார்?” - திமுகவை சாடிய அமைச்சர் நிர்மல் குமார்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com