
நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் உரை நிகழ்த்தும் ஆர்.எஸ் எஸ் இயக்கத்தை பாராட்டி பேசியிருந்தார், அவர் பேசுகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) நிறுவப்பட்டது. அதன் தொண்டர்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தாய்நாட்டின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர்.
சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவை அதன் அடையாளங்கள். உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. அதன் சேவைக்கு பங்களித்த தொண்டர்களையும் வணங்குகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பயணத்தில் தேசம் பெருமை கொள்கிறது” இவ்வாறு குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பாராட்டியிருப்பது ஏற்புடையதல்ல. அந்த இயக்கம் பல முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம்.
இந்திய மக்களை பிளவுப்படுத்துகிற இயக்கமான ஆர்எஸ்எஸ், ஹிந்துக்களை வாக்கு வங்கியாக பார்க்கிறது. ஆனால், அரசு விழாவில் ஒரு இயக்கத்தை பிரதமர் உயர்த்திப் பிடிப்பது, ஜனநாயகத்துக்கு விரோதமான செயல், என விசிக தலைவர் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
பொதுவாக, அனைத்து துறைகளையும் படிப்படியாக அவுட்சோர்சிங் என்ற பெயரால் அரசு தனியார் மயமாக்கி வருகிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வலியுறுத்தினோம்.
இந்நிலையில், அனுமதியின்றி போராடிய தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தான் தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால், இதனை நியாயப்படுத்தவில்லை.தொழிலாளர்கள் போராட கூடாது அச்சுறுத்த வேண்டும் என அரசு எண்ணி இருந்தால் இரண்டு அல்லது மூன்றாவது நாளே அப்புறப்படுத்தி இருக்க முடியும்.
ஆனால், திமுக ஆட்சிக்கு எதிரானவர்கள் கூட்டணிக்கு எதிரானவர்கள் விடுதலை சிறுத்தைகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கடும் விமர்சனங்களை வைக்கிறார்கள் என தெரிவித்தார்”